கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சூர்யா- ஜோதிகா ! வைரலாகும் புகைப்படங்கள் !!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சூர்யா- ஜோதிகா ! வைரலாகும் புகைப்படங்கள் !!

Update: 2021-06-22 18:49 GMT

இந்தியாவில் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது கொரோனா 2ஆவது அலை. வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. எனினும் மூன்றவாது அலை அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனையொட்டி கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. எனினும் மக்கள் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டிவருகின்றனர். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளே அதற்கு காரணம். இதனிடையே அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

 

அந்த வகையில், தற்போது நடிகர் சூர்யா மற்றும் தனது மனைவியும் நடியுமான ஜோதிகாவுடன் சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். சூர்யா, ஜோதிகா இருவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டபின்னர் அதற்கான புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். தற்போது அந்த புகைப்படம் வைலாகி வருகிறது.


newstm.in

Tags:    

Similar News