சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலிக்கு பிரமாண்டமாக நடந்த திருமணம்.. வாழ்த்திய சகோதரி !

சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலிக்கு பிரமாண்டமாக நடந்த திருமணம்.. வாழ்த்திய சகோதரி !

Update: 2021-12-17 07:01 GMT

தற்கொலை செய்துக்கொண்ட சுஷாந்த் சிங்கின், முன்னாள் காதலிக்கு தொழிலதிபருடன் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.  

இந்தி தொலைக்காட்சி தொடர்கள், பாலிவுட் படங்களில் நடித்து வருபவர் அங்கிதா லோகந்தே. இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. டிவி தொடர்களில் நடித்ததால் பெண்கள் மத்தியிலும் பிரபலமாகியுள்ளார். நடிகை அங்கிதா லோகந்தே மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் சுஷாந்த் சிங் ஆரம்பகாலத்தில் சீரியலில் நடித்துள்ளார். அப்போது சீரியலில் நடித்துவந்த காதலத்தில் இருவரும் சில ஆண்டுகளாக காதலித்த நிலையில் பிரிந்துவிட்டனர். சுஷாந்தை பிரிந்த பிறகு தொழில் அதிபர் விக்கி ஜெயினை காதலித்தார் நடிகை அங்கிதா. 3 ஆண்டுகளாக காதலித்த அவர்களுக்கு கடந்த 14ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற்றது.

முன்னதாக மெஹந்தி, சங்கீத் நிகழ்ச்சிகள் நடந்தது. அதில் பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் கலந்து கொண்டார். அவரின் மணிகர்னிகா படத்தில் அங்கிதா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தன் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் அங்கிதா பதிவிட்டுள்ளார். அதை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் சகோதரி ஸ்வேதா சிங், அங்கிதாவை வாழ்த்தியிருக்கிறார். இதனையும் சுட்டிக்காட்டி பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

newstm.in

Tags:    

Similar News