அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைப்பு.. சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!
அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைப்பு.. சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!
நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள கடிதத்தில், ‘தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஜனவரி 1, 2022 முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து வெளியிடப்பட்ட அரசாணையில் அகவிலைப்படி என்ற தலைப்பின் கீழ் புதிய அடிப்படை ஊதியத்தில் 14 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்குப் பின்னர் தொடர்ந்து வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு குறித்து எவ்வித ஆணையும் அரசாணையில் குறிப்பிடப்படவில்லை.
எனவே, உயர்த்தி வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி குறித்த ஆணை அரசிடமிருந்து பெற்று வழங்கப்படும் வரை நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு ஜனவரி 1 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்குமாறு அனைத்து சங்கங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.