கொரோனா தடுப்பூசியால் கண், காது, முகம் முழுவதும் வீங்கிவிட்டது.. பார்த்திபன் வருத்தம் !
கொரோனா தடுப்பூசியால் கண், காது, முகம் முழுவதும் வீங்கிவிட்டது.. பார்த்திபன் வருத்தம் !
தமிழ்நாட்டில் சில காலம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் கொரோனா வைரஸ் மிகத்தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆலோசனை நடத்தி விரைவில் அடுத்தக்கட்ட கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதனிடையே, கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திரைப்பட இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தடுப்பூசி எடுத்துக்கொண்டார். இந்நிலையில் தனக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இயக்குனர் பார்த்திபன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வணக்கமும் நன்றியும்! ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு! வருத்தமும்,இயலாமையும். இரண்டாம் தவனை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது டாக்டருக்குக் போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துக்கொண்டேன் எனவே
தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற reactions. அதுவும் எனக்கு ஏற்கனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது.என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற reactions. அதுவும் எனக்கு ஏற்கனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது.என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில்...
— Radhakrishnan Parthiban (@rparthiepan) April 7, 2021
newstm.in