நம் உடலில் ஆக்சிஜன் குறைவதற்கான அறிகுறிகள் !!

நம் உடலில் ஆக்சிஜன் குறைவதற்கான அறிகுறிகள் !!;

Update: 2021-06-07 12:35 GMT

நம் உடலின் ஆக்சிஜன் அளவை நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். உடலில் ஆக்சிஜன் குறைவதை இந்த சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அதிக காய்ச்சல்,மூச்சுத்திணறல்,தொடர் இருமல்,உயர் ரத்த அழுத்தம்,அமைதியின்மை,நெஞ்சுவலி

இவற்றின் மூலம் உடலில் ஆக்ஸிஜன் குறைபாடு உருவாகி இருப்பதை கண்டறியலாம். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்துவருவது மூச்சுத்திணறல் மூலம் தெரிந்துவிடும். மூச்சுத்திணறல் ஏற்பட்டால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு, பின்னர் மருத்துவரை அணுகி மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்.

ரத்தத்தில் ஆக்சிஜன் குறைந்திருப்பதற்கான மற்றொரு அறிகுறி அதிக காய்ச்சல். உடல் அதிக சூடாக இருந்தாலும் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.கொரோனா நோயாளி அடிக்கடி இருமுகிறார் என்றால் அவரது ரத்தத்தில் ஆக்சிஜன் குறைந்து வருகிறது என்று அர்த்தம்.

ஆக்சிஜன் அளவு குறைவதற்கான மற்றொரு அறிகுறி உயர் ரத்த அழுத்தம். அதனால் கொரோனா நோயாளியின் ரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.அதே போல் மன அமைதி இல்லாமல், படபடப்பாக இருக்கிறது என்றாலும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து வருகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். அதுபோன்ற நேரத்திலும் மருத்துவரை அணுகுவது அவசியம்.

Tags:    

Similar News