டி20 உலகக்கோப்பை: ஆப்கானுக்கு எதிராக இந்திய அணி பேட்டிங்... 2 முக்கிய மாற்றங்கள் !!

டி20 உலகக்கோப்பை: ஆப்கானுக்கு எதிராக இந்திய அணி பேட்டிங்... 2 முக்கிய மாற்றங்கள் !!

Update: 2021-11-03 19:45 GMT

டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

ஏற்கனவே பாகிஸ்தான் அணியுடன் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இந்திய அணியில் இன்றைய போட்டியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். அதன்படி, சூர்யகுமார் யாதவ் மீண்டும் அணிக்கு வந்துள்ளார். அதேப் போன்று வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக ரவிசந்திரன் அஸ்வின் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்திய அணியை பொறுத்தவரை முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து உள்ளதால், இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது. இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால் அடுத்து வரும் 3 போட்டிகளில் வெல்வது ஒரு புறம் இருந்தால், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியும் முக்கிய பங்காக உள்ளது. அதோடு ரன்ரேட் விகிதம் முக்கிய பங்காற்றும். 

ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று குரூப் 2 பிரிவில் 2ஆவது இடத்தில் உள்ளது. ரன்ரேட் +3 என்ற அளவில் வைத்துள்ளது. இந்தியா 2 போட்டிகளில் தோற்று ரன்ரேட் - என்ற அளவில் உள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான வெற்றியை பொறுத்தே ஆப்கன் அணிக்கு அரையிறுதி போட்டிக்கு முன்னேறுவது தெரிய வரும்.

இந்திய அணி : கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின், சர்துல் தாகூர், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா

newstm.in

Tags:    

Similar News