டி- 20 உலகக்கோப்பை: இந்தியாவுடன் பிரச்னையை இழுக்கும் பாகிஸ்தான் வீரர்கள் !!
டி- 20 உலகக்கோப்பை: இந்தியாவுடன் பிரச்னையை இழுக்கும் பாகிஸ்தான் வீரர்கள் !!
பாகிஸ்தானுடன் இருதரப்பு போட்டிகளில் ஆட மறுக்கும் இந்திய அணி தங்களை பெரிய அணியாகக் கூறிகொள்ள முடியாது என முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் சீண்டியுள்ளார்.
ஐபிஎல் முடிந்ததும் 20 ஓவர் கிக்கெட் உலகக்கோப்பை போட்டித் தொடர் தொடங்குகிறது. இதில் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நேரடியாக மோதஉள்ளன. இதனால் இப்போட்டிக்கு இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே, இரு அணிகளின் ஓய்வுபெற்ற வீரர்கள் இப்போட்டி தொடர்பாக பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். இதில் சில சர்ச்சைகளை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில், ஏஆர்ஒய் நியூஸ் ஏஜென்சிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் பேட்டியளித்தார். அப்போது, பாகிஸ்தான் அணியில் இருப்பது போல் பவுலர்கள் ஆல்ரவுண்டர்கள் இந்திய அணியில் இருக்கின்றார்களா? அல்லது பாகிஸ்தான் அணியிடம் இந்தியா நெருங்க முடியாது என்கிறீர்களா? என கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அப்துல் ரசாக், பாகிஸ்தானுடன் இந்தியா போட்டிப் போட முடியும் என்று நான் நினைக்கவில்லை. பாகிஸ்தான் அணியில் இருக்கும் திறமைகள் முற்றிலும் வேறுபட்டது. ஆனால் இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு தொடர்களில் ஆடாமல் இருப்பது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று நான் நினைக்கிறேன்.
இரு அணிகளும் மோதினால்தான் இரு தரப்பு வீரர்களும் எந்த அளவுக்கு நெருக்கடியையும் அழுத்தத்தையும் சுமந்து மீண்டு வருகிறார்கள், கையாள்கிறார்கள் என்பது தெரியவரும். அப்படி இருதரப்பு போட்டிகள் நடந்தால் பாகிஸ்தான் அணியில் உள்ள திறமை இந்திய அணியில் இல்லை என்பதை மக்கள் உணர்வார்கள். பாபர் ஆசம் தலைமை பாகிஸ்தான் அணி இந்திய அணியை விட மேலானது. பாகிஸ்தான் அணியில்தான் திறமை அதிகம்.
பாகிஸ்தான், இந்திய அணிகளின் ஆற்றல்களை வைத்து ஒப்பிட்டுப் பாருங்கள், இங்கு இம்ரான் கான், அங்கு கபில்தேவ், ஆனால் இம்ரான் கான் பெட்டர். பாகிஸ்தானில் வாசிம் அக்ரம், இந்தியாவில் இவருக்கு ஈடாக ஒரு வீரர் கூட இல்லை. எங்களிடம் ஜாவேத் மியாண்டட் இருந்தார் அங்கு சுனில் கவாஸ்கர். பிறகு எங்களிடம் இன்சமாம், யூசுப், யூனிஸ் கான், ஷாகித் அப்ரீடி இருந்தனர். இந்திய அணியில் திராவிட், சேவாக்.
ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் பெட்டர் பிளேயர்களை உருவாக்கியுள்ளது, இந்தியா எங்களுடன் விளையாட மறுப்பதற்கு இதுவும் ஒரு பெரிய காரணம், என்று அப்துல் ரசாக் கூறியுள்ளார். ஆனால் இதற்கு இந்தியா ரசிகர்கள் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
newstm.in