ஆப்கனில் பெண்கள் தங்கள் உரிமைகளைக் கோரி போராட்டம் நடத்திவரும் சூழலில் தலிபான்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், தலிபான் அமைப்பினர் நாட்டை கைப்பற்றினர். அதிபராக இருந்த அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனர்.

தலிபான்கள் பழமைவாதிகள் என்பதால் பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிப்பர். இதனால் பெண்கள் பெரும அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், அண்மையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் மாசர் ஐ ஷாரிப் நகரத்தில் தங்களுக்கான உரிமைகள் வேண்டி பெண்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த தலிபான்கள் அவர்களைச் சாட்டையால் தாக்கினர். இதில் வலி தாங்க முடியாமல் பெண்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். 

இந்த நிலையில் காபூல் பல்கலைக்கழகத்தில் நடந்த தலிபான்கள் ஆதரவுக் கூட்டத்தில் பெண்களைக் கட்டாயப்படுத்தி, தலிபான்கள் கலந்துகொள்ள வைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு தலிபான்கள் கருத்து தெரிவிக்கவில்லை. இதனால் சர்வதேச அளவில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in


 

Tags: