உத்தராகண்ட் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் தாமி !

உத்தராகண்ட் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் தாமி !

Update: 2021-07-04 19:18 GMT

பாஜக ஆளும் அம்மாநிலத்தில் 4 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் பதவி விலகியதையடுத்து, கடந்த மார்ச் மாதம் மக்களவை எம்.பி.யான தீரத் சிங் ராவத் முதல்வராக பதவியேற்றார். அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் அடுத்தாண்டு அங்கு தேர்தல் நடைபெறவுள்ளதால் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பாஜக திட்டமிட்டு கட்சியை மீண்டும் வலுப்படுத்த முடிவுசெய்துள்ளது.

இதனையடுத்து முதலமைச்சராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் பதவி விலகினார். அவர் ஆளுநர் பேபி ராணி மௌரியாவை சந்தித்து தனது ராஜினாமா கடிததத்தை அளித்தார். இந்நிலையில் டேராடூனில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் முன்னிலையில் நேற்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மாலை நடைபெற்றது. இதில், புஷ்கர் சிங் தாமி கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 

இதையடுத்து அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆளுநரின் அழைப்பையடுத்து தாமி இன்று மாலை பதவியேற்றார். உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூனில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றுக் கொண்டார். 

அவருக்கு உத்தரகாண்ட் மாநில ஆளுநர் பேபி ராணி மௌரியா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதலமைச்சரைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது. இந்த விழாவில் பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

newstm.in


 

Tags:    

Similar News