போதைப்பொருள் பயன்படுத்திய தமிழ் நடிகை காதலருடன் கைது !!
போதைப்பொருள் பயன்படுத்திய தமிழ் நடிகை காதலருடன் கைது !!
மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த பிறந்தநாள் விழாவில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பெண் ஒருவர் ஆண் நண்பருடன் அங்குள்ள அறைக்கு தனியாக சென்றதை போலீசார் கண்டனர்.
ஆனால், அவர்கள் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார், பின்னர் அவர்கள் சென்ற அறைக்கு சென்று சோதனை நடத்தினர். அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது. அதாவது அறையில் வைத்து அப்பெண் சிகரெட்டில் போதைப்பொருளை வைத்து புகைத்தது கண்டறியப்பட்டது.
பின்னர் நடந்த விசாரணையில் அவர் தமிழ் நடிகை நடிகை நைய்ரா ஷா என்பது உடன் சென்றது அவரது காதலர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் நடிகை நைய்ரா ஷா மற்றும் அவரது காதலரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அவர்கள் இருவரும் போதைப்பொருள் உட்கொண்டது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து நைய்ரா ஷாவும் அவரது காதலரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். பின்னர் ஜாமீனில் இருவரும் விடுவிக்கப்பட்டனர். நடிகை நைய்ரா ஷா 'மிருகா' என்ற தமிழ் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
newstm.in