தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிப்பு.. யாருக்கெல்லாம் தெரியுமா..?

தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிப்பு.. யாருக்கெல்லாம் தெரியுமா..?

Update: 2022-01-26 18:06 GMT

தமிழ்ச் சமுதாய உயர்வுக்கு பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், 2021-ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறை விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

*பேரறிஞர் அண்ணா விருது - நாஞ்சில் சம்பத்

*சொல்லின் செல்வர் விருது - சூர்யா சேவியர், 

*சிங்கார வேலர் விருது - கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்

*தமிழ்த்தாய் விருது - மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்துக்கு

*இளங்கோவடிகள் விருது - நெல்லை கண்ணன்

*கம்பர் விருது - பாரதி பாஸ்கர் -

*மகாகவி பாரதியார் விருது - பாரதி கிருஷ்ணகுமார்

*பாவேந்தர் பாரதிதாசன் விருது - புலவர் செந்தலை கவுதமன்

*வள்ளலார் விருது - முனைவர் இரா. சஞ்சீவிராயர்

*தேவநேயப்பாவாணர் விருது - முனைவர் கு. அரசேந்திரன்

*உமறுப்புலவர் விருது - நா. மம்மது

*கி.ஆ.பெ. விருது -முனைவர் ம. இராசேந்திரன்

*ஜி.யு.போப் விருது- ஏ.எஸ். பன்னீர்செல்வம், 

*மறைமலையடிகள் விருது -சுகி.சிவம், 

*அயோத்திதாசப் பண்டிதர் விருது -ஞான. அலாய்சியஸ் 

* சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது - உயிர்மை திங்களிதழுக்கு வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு முதல் விருது தொகை ரூ.1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Similar News