குடியரசு தினவிழாவில் இரு மாநிலங்களில் கொடியேற்றிய தமிழிசை..!!
குடியரசு தினவிழாவில் இரு மாநிலங்களில் கொடியேற்றிய தமிழிசை..!!
சுதந்திர தினத்தின்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல்வர்களும், குடியரசு தினவிழாவின்போது ஆளுநரும் தேசியக்கொடியேற்றுவது மரபு. புதுவையை பொறுத்தவரை தெலுங்கானா ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பு ஆளுநராக உள்ளார்.
இந்தநிலையில் குடியரசு தினமன்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானாவில் காலை 7 மணிக்கு தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
அந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து தனி விமானம் மூலம் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி வந்தார். கடற்கரை சாலையில் நடந்த விழாவில் பங்கேற்று தேசியக்கொடியேற்றி வைத்தார். குடியரசு தினவிழாவில் இரு மாநிலங்களில் கொடியேற்றி முதல் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆவார்.
இந்நிலையில், குடியரசு தினத்தன்று இரு மாநிலங்களில் கொடியேற்றியதை அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.