தமிழகத்தை தொடர்ந்து கலங்கியது டெல்லி.. பிரதமர் மோடி நேரில் அஞ்சலி ! வீடியோ
தமிழகத்தை தொடர்ந்து கலங்கியது டெல்லி.. பிரதமர் மோடி நேரில் அஞ்சலி ! வீடியோ
டெல்லியில் முப்படைத்தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு ராணுவ ஹெலிகாப்டரில் சென்றனர். ஹெலிகாப்டர் அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர்கள் செல்ல வேண்டிய இடத்தில் இறங்க இருந்தது.
ஆனால், அதற்கு முன்னதாகவே காட்டேரி வனப்பகுதியில் ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விழுந்து நொறுங்கியது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களுக்கு நேற்று முதலமைச்சர் உள்ளிட்டோர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ விமானம் மூலம் பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்கள் டெல்லி கொண்டுவரப்பட்டன. அங்கு வைக்கப்பட்டிருந்த பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி நேரில் அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் ஆறுதல் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து இறந்தவரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரைத்தொடர்ந்து தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவல் அஞ்சலி செலுத்தினார். ராணுவத்தளபதி நரவானே உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்.
#WATCH PM Narendra Modi leads the nation in paying tribute to CDS General Bipin Rawat, his wife Madhulika Rawat and other 11 Armed Forces personnel who lost their lives in the military chopper crash yesterday pic.twitter.com/6FvYSyJ1g6
— ANI (@ANI) December 9, 2021
newstm.in