தொடர்ந்து தமிழகம் முதலிடம்! களமிறங்கிய தமிழ் நடிகர்கள்!
தொடர்ந்து தமிழகம் முதலிடம்! களமிறங்கிய தமிழ் நடிகர்கள்!
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றின் பரவல் விபரீதத்தை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு, பிரதமரும், மாநில முதல்வர்களும் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தற்போது சினிமா பிரபலங்களும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
தொடர்ந்து கொரோனா தொற்றின் 2வது அலை பரவி வருவதில், அதிகளவில் தொற்று பாதிப்பு ஏற்படுவது இந்தியாவில் தமிழகம் தொடர்ந்து மூன்றாவது நாளாக முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் படுவேகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. பொதுமக்களிடையே கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சினிமா நடிகர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த இருமல், தொண்டை வறட்சி, தொடர் காய்ச்சல், வயிற்றுப் போக்கு, தலைவலி போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக உங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவரின் உதவியை நாட வேண்டும் என்று நடிகர் சிவக்குமார் இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
மேலும், நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக மூச்சு பயிற்சி மேற்கொள்வது எப்படி என்றும் நடிகர் சிவக்குமார் செயல்முறை விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகிபாபு போன்றோர்களும் கொரோனா விழிப்புணர்வு குறித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.