ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் தளர்வு.. தமிழக அரசு அறிவிப்பு..!
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் தளர்வு.. தமிழக அரசு அறிவிப்பு..!
தமிழகத்தில் இன்று (6ம் தேதி) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு என்பதால் பேருந்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது மத்திய / மாநில அரசு தேர்வாணையங்களின் போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்வோர் தங்கள் ஹால் டிக்கெட் அல்லது அழைப்புக் கடிதத்தை போலீசாரிடம் காட்டி பயணம் செய்யலாம். இதற்கு காவல்துறை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.