துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை : முதலமைச்சர்!!

துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை : முதலமைச்சர்!!

Update: 2022-01-06 16:32 GMT

பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை ஆளுநர் நியமிப்பார். ஆனால் அப்படி நியமிக்காமல், அரசே நியமிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் இன்று சட்டப்பேரவையில் எழுந்தது. பாமக தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி இது தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் பல்கலைக்கழக் துணைவேந்தர்களை அந்தந்த மாநில ஆளுநர்கள் நியமிப்பது வழக்கம். இந்நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி சட்டப்பேரவையில் பேசினார்.

அதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியபோது, இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும், விரைவில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் மார்ச் மாதம் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டு சட்ட திருத்த மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றும் என்று தெரிவித்தார்.

newstm.in

Similar News