மாணவிக்கு ரூ.1 லட்சம் உதவி செய்த தமிழக எம்பி !
மாணவிக்கு ரூ.1 லட்சம் உதவி செய்த தமிழக எம்பி !
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஏழை மாணவி ஒருவருக்கு தமிழகத்தைச் சேர்ந்த எம்பி ஒருவர் நேரில் சென்று நிதி உதவி வழங்கியுள்ளார்.
ஒடிசா மாநிலம், பூரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயது ருசுபோடா. இவர், வறுமையில் இருந்தாலும் ஆர்வத்துடன் படித்து வந்தார். 12 -ம் வகுப்பில் அதிக மதிப்பெண்களைப் பெற்றார். அதன் மூலம் அவருக்குத் தனியார் பொறியியல் கல்லூரியில் அரசுக் கல்வி உதவித்தொகையில் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ படித்து முடித்தார்.
எனினும் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத காரணத காரணத்தால் கல்லூரியிலிருந்து சான்றிதழ்களை வழங்க கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டது.
இதனால், தனது கல்விக்காகவும், கட்டணத்தைச் செலுத்தி சான்றிதழ்களைப் பெறுவதற்காகவும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளார் அந்தமாணவி. மேலும், தனது நிலையை சமூக வலைதளங்கள் மூலம் விளக்கி உதவி கேட்டுள்ளார்.
இந்நிலையில், தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார் ஒடிசா சென்று அந்த மாணவியை நேரில் சந்தித்து முதல் கட்டமாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். மேலும், கல்விக் கடன் பெறுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.