தமிழக சபாநாயகர், அமைச்சரின் கார்கள் விபத்து! மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது பரிதாபம்!

தமிழக சபாநாயகர், அமைச்சரின் கார்கள் விபத்து! மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது பரிதாபம்!

Update: 2021-03-30 14:49 GMT

தமிழகத்திலும், புதுவையிலும் அடுத்த மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து இந்திய பிரதமர் மோடி இன்று புதுவையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற அமைச்சர் எஸ்.பி வேலுமணி, சபாநாயகர் தனபாலின் வாகனங்கள் தாராபுரம் அருகே விபத்தில் சிக்கின. 

முதல்வர் எடப்பாடியின் வாகனத்தைப் பின் தொடர்ந்து சென்ற இந்த கார்கள் விபத்துக்குள்ளான நிலையில், இந்த விபத்தில் 3 வாகனங்கள் சேதமடைந்தன. கார் டிரைவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாஜக மாநில தலைவர் எல். முருகன் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து மோடி இன்று தாராபுரத்தில் பிரதமர் மோடி, பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் தாராபுரம் வேட்பாளர் எல். முருகன் உள்ளிட்ட 13 வேட்பாளர்களை ஆதரித்து மோடி வாக்கு சேகரிக்க உள்ளார். பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஒரே மேடையில் பங்கேற்று பேச உள்ளனர். 

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சபாநாயகர் தனபால், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கார் மூலம் கோவையில் இருந்து தாராபுரத்திற்கு சென்றனர். சூரியநல்லூர் அருகே வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது சபாநாயகர் தனபால், அமைச்சர் வேலுமணியின் வாகனங்கள் விபத்துக்குள்ளானது.  சபாநாயகர் தனபால், அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. காயமடைந்த கார் டிரைவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

Tags:    

Similar News