தமிழகம் வன்முறைக் களமாக மாறிவிடும்.. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை..!

தமிழகம் வன்முறைக் களமாக மாறிவிடும்.. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை..!

Update: 2021-12-24 16:45 GMT

தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் திமுகவினர் நடத்திய வன்முறை தமிழக அரசியலை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த விவகாரத்தில், நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக, முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் திமுகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.


சகிப்புத் தன்மையும், கருத்துரிமையை மதிப்பதும்தான் ஜனநாயக அரசியலின் அடிப்படை. அதை மீறியவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

விமர்சனங்களுக்கு வன்முறைகளால் பதிலடி தரத் தொடங்கினால் தமிழகம் அரசியல் களமாக இருக்காது.. வன்முறைக் களமாக மாறிவிடும். அந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது. அதைக் கருத்தில் கொண்டு இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் அனைவரும் தடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Similar News