தமிழிசை மருமகன் தூக்கிட்டு தற்கொலை

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனின் மருமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழிசையின் மருமகன் சண்முகநாதன் கோவையில் வசித்து வந்தார். அங்கு அவர் மெடிக்கல் ஷாப் ஒன்றை நடத்தி வந்ததாக தெரிகிறது.

Update: 2020-02-29 17:00 GMT

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனின் மருமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழிசையின் மருமகன் சண்முகநாதன் கோவையில் வசித்து வந்தார். அங்கு அவர் மெடிக்கல் ஷாப் ஒன்றை நடத்தி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அவர் பெற்றோரிடம் கார் வாங்கி தரச் சொல்லி கேட்டதாக தெரிகிறது. ஆனால் பெற்றோர் கார் வாங்கித் தராததால் சண்முகநாதன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. 


இச்சம்பவம் குறித்து கோவை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சண்முகநாதனுக்கு இறுதி மரியாதை செலுத்த தமிழிசை கோவை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Tags:    

Similar News