தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..!!
தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..!!
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் தங்கி படித்து வந்த லாவண்யா அங்கு 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கட்டாய மதமாற்றம் புகார் எழுந்த நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்த பாஜக மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. ஆனால் இது வெறும் வதந்தி என்றும், பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சூழலில் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவியின் வீட்டிற்கு சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மாநில மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் லாவண்யாவின் படத்திற்கு மலர்தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய அவர்கள் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கினர்.
மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இன்று விசாரணையை தொடங்கியது.இந்நிலையில், மாணவியின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டதை தொடர்ந்து சிபிஐக்கு மாற்றி மதுரைக் கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிடடுள்ளார்.