ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி மாற்றம்.. பள்ளிக் கல்வித்துறை தகவல்..!
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி மாற்றம்.. பள்ளிக் கல்வித்துறை தகவல்..!
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பால், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் தேதி மாற்றப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி துறையின் கீழ் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும். இந்த ஆண்டு கவுன்சிலிங் ஆன்லைன் வழியில் நடக்கிறது.
இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கு 58 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு பதவிகளின் அடிப்படையில் இம்மாதம் 19-ம் தேதி முதல் படிப்படியாக இடமாறுதல் கவுன்சிலிங் நடந்து வந்தது.
இந்நிலையில், நகர்ப்பற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்குக்கான கால அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் நரேஷ், புதிய அட்டவணை அடங்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
இந்த அட்டவணையை அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்தி, கவுன்சிலிங்கை புகார் இன்றி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.