தங்கநகை காணாமல் போனதால் இளம்பெண் தற்கொலை!!

தங்கநகை காணாமல் போனதால் இளம்பெண் தற்கொலை!!

Update: 2022-01-19 07:00 GMT

தங்க நகை காணாமல் போனதால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்த அனுபிரீத்தி என்ற பெண்ணுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு விழுப்புரத்தைச் சேர்ந்த அருள் பிரகாசம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு இரண்டு ஆண்குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அனுபிரீத்தி சென்றிருந்தார்.

அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த நான்கு பவுன் தங்க நகை காணாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டிற்கு வந்த அனுபிரீத்தி கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், அவர் வீட்டின் குளியலறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Similar News