போதையில் மாணவிகளிடம் சில்மிஷம்!! துரத்தி துரத்தி செருப்பால் அடித்து பெற்றோர்!!
மதுபோதையில் சிறுமிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்.. விரட்டி விரட்டி செருப்பால் அடித்து பெற்றோர்!!
தெலங்கானாவில் 5ம் வகுப்பு படிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறி, தனியார் பள்ளி ஆசிரியரை அடித்து உதைத்து பொதுமக்கள் போலிசில் ஒப்படைத்தனர்.
கர்னூல் மாவட்டம், பெத்தாபுரத்தை சேர்ந்த சரத். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து சரத், தனது வீட்டில் 5ம் வகுப்பு மாணவிகளுக்கு டியூஷன் எடுப்பதாகக் கூறியுள்ளார். இதனால், தனியார் பள்ளியின் 5ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஏராளமானோர் சரத்திடம் டியூஷனுக்கு சேர்ந்தனர்.
இவர்களில் பல சிறுமிகளை வீட்டில் தனியாக அழைத்துச் சென்று மதுபோதையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர், தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.
newstm.in