விமானம் போல் மாறுது ‘தேஜஸ்’.. பயணிகளை வரவேற்க பெண்கள்.. இந்தியன் ரயில்வே அதிரடி..!

விமானம் போல் மாறுது ‘தேஜஸ்’.. பயணிகளை வரவேற்க பெண்கள்.. இந்தியன் ரயில்வே அதிரடி..!

Update: 2021-12-11 17:03 GMT

விமானங்களில் பணிப்பெண்கள் இருப்பதுபோல, ரயில்களிலும் பணிப்பெண்களை நியமிக்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: ‘பயணியர் வசதி மற்றும் பாதுகாப்புக்கு ரயில்வே அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ரயில்களில் பயணியருக்கு உதவும் பணியில் ஆண்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர்.


விமானங்களில் பயணியருக்கு உதவும் பணியில் பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதுபோல ரயில்களிலும் பணிப்பெண்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சதாப்தி, ராஜ்தானி போன்ற நீண்ட தூரம் பயணம் செய்யும் ரயில்களில் பணிப்பெண்கள் நியமிக்கப்பட மாட்டார்கள்.

குறுகிய தூரம் பயணிக்கும் தேஜஸ் போன்ற எக்ஸ்பிரஸ் ரயில்களில் மட்டும் முதல்கட்டமாக பணிப்பெண்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விருந்தோம்பலில் நன்கு பயிற்சி பெற்ற பெண்கள் தான் இந்த பணியில் நியமிக்கப்படுவர்.ரயில்களில் ஏறும் பயணியரை வரவேற்பது, பயணியருக்கு உணவு வழங்குவது, அவர்களுக்கு வசதிகள் செய்து தருவது உள்ளிட்ட பணிகளை அவர்கள் மேற்கொள்வர். மேலும், பகல் நேரத்தில் மட்டும் பணிப்பெண்கள் பணியாற்றுவர்’ இவ்வாறு அவர் கூறினார்.

Similar News