மு.க.ஸ்டாலினுடன் தெலுங்கானா முதல்வர் சந்திப்பு - மாநில அரசுகள் ஒன்றிணைவது குறித்து பேச்சுவார்த்தை ??
மு.க.ஸ்டாலினுடன் தெலுங்கானா முதல்வர் சந்திப்பு - மாநில அரசுகள் ஒன்றிணைவது குறித்து பேச்சுவார்த்தை ??
தமிழ்நாடு வந்துள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தனது குடும்பத்தினருடன் திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.இந்நிலையில் சென்னை, ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேரில் சந்தித்தார்.
இதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு மு.க.ஸ்டாலினை சந்திரசேகர ராவ் சந்தித்திருந்தார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இதற்கு முன்பு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் சந்தித்து பேசியிருந்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுடனான இன்றைய சந்திப்பின்போது தென்னிந்திய மாநிலங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக மாநில அரசுகள் ஒன்றிணைவது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.