முக ஸ்டாலினை வெச்சு செய்யும் கலைஞர் தொலைக்காட்சி! அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்!
தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்குவதற்காக்க கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி உள்ளார். தமிழகம் முழுவதும் திமுகவினர் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக கையெழுத்துக்களை வாங்கி வரும் நிலையில்,
தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்குவதற்காக்க கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி உள்ளார். தமிழகம் முழுவதும் திமுகவினர் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக கையெழுத்துக்களை வாங்கி வரும் நிலையில், இன்று அண்ணா சாலையில் சென்ற பேருந்துகளிலும், வாகனங்களில் செல்பவர்களிடமும் திமுக தலைவர் முக ஸ்டாலின் நேரடியாக கையெழுத்துக்களை வாங்கினார். சாலையில் சென்றவர்களில் பலரும் கையெழுத்துப் போட மறுத்ததைக் கண்டு திமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.
குறிப்பாக, மாணவர்கள் கையெழுத்து போடுவதற்கு மறுத்து வந்தனர். அப்படி ஒரு வாகனத்தில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவரிடம் கையெழுத்து வாங்குவதற்காக அட்டையை மு.க.ஸ்டாலின் நீட்டினார். கையெழுத்து வாங்குவதற்காக தான் நீட்டுகிறார் என்பதைப் புரிந்துக் கொண்ட அந்த இளைஞர், ஸ்டாலினைப் பார்த்ததும் கையெழுத்துப் போட, அவரின் முகத்தில் அறைந்தார் போல் கையெழுத்து போட மறுத்து விட்டார்.
இதனால் அவமாப்பட்ட மு.க.ஸ்டாலின், அங்கிருந்து உடனடியாக நடையைக் கட்டினார். முக ஸ்டாலின் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்குவதைப் படம் பிடித்த கலைஞர் தொலைக்காட்சி, இந்த காட்சியை அப்படியே தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பினார்கள்.
சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை அதிகமாக பகிர்ந்து, ஸ்டாலினைக் கலாய்த்து வருகிறார்கள். சொந்த தொலைக்காட்சியே இப்படி தலைவரை குப்புற கவிழ்த்து விடறாங்களே என்று திமுக உடன்பிறப்புகளும் வீடியோவுக்கு கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
newstm.in