எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியதால் பதற்றம்.. போலீசார் குவிப்பு.. சிசிடிவியில் பரபரப்பு காட்சிகள் !!

எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியதால் பதற்றம்.. போலீசார் குவிப்பு.. சிசிடிவியில் பரபரப்பு காட்சிகள் !!

Update: 2022-01-25 16:00 GMT

தஞ்சை வடக்கு வீதியில் எம்.ஜி.ஆர். சிலையை ஒருவர் உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சை வடக்குவீதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை உள்ளது. இப்பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் காணப்படும். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் எம்.ஜி.ஆர். சிலையை உடைக்க முயன்றனர். ஆனால் உடைக்க முடியாததால் பெயர்த்து பீடத்தின் பின்புறம் முழு சிலையையும் தூக்கி வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் எம்.ஜி.ஆர். சிலை பெயர்த்து பீடம் பின்புறம் தனியாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து சிலையை மீட்டு மீண்டும் பீடத்தில் வைத்தனர்.

இதுகுறித்து மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அ.தி.மு.க.வினர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலையை சேதப்படுத்தியவர்கள் யார்? என அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.  

அந்த வகையில், எம்.ஜி.ஆர். சிலையை ஒருவர் உடைத்த வழக்கில் சேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேகர் குடிபோதையில் சிலையை சேதப்படுத்தியது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளார்.

newstm.in


 

Similar News