எல்லையில் பதற்றம் – 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!!

எல்லையில் பதற்றம் – 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!!

Update: 2021-12-26 06:45 GMT

ஜம்மு காஷ்மீரில் இருவேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர்.

சோபியான் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர்.

அப்போது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட பதிலடி தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்கள் மூவரும் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரை குறிவைத்து தாக்குதல் நடத்திவந்த பயங்கரவாதிகள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோல் அவந்திபுராவிலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதனையடுத்து அப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேறு பயங்கரவாதிகள் யாரேனும் பதுங்கியுள்ளனரா என்று பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Similar News