கோவையில் பதற்றம்..!! கணவரை பிரிந்து வாழ்ந்த வந்த பெண் மீது மர்ம நபர் ஆசிட் வீச்சு...

கோவையில் பதற்றம்..!! கணவரை பிரிந்து வாழ்ந்த வந்த பெண் மீது மர்ம நபர் ஆசிட் வீச்சு...

Update: 2022-01-08 05:20 GMT

தர்மபுரியை சேர்ந்தவர் ஸ்டாலின் இவரது மனைவி ராதா (வயது 34). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ராதாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து ராதா தனது கணவரை பிரிந்து 8 மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார்.

பின்னர் அம்மன் குளம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய ராதா அந்தப் பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பால் வாங்குவதற்காக சென்றார். பின்னர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

வீட்டின் அருகே சென்றபோது இருட்டில் வரைந்திருந்த யாரோ மர்ம நபர் ராதாவின் முகத்தில் ஆசிட்டை வீசி தாக்கிவிட்டு அங்கு இருந்து தப்பி சென்றார்.

இதில் ராதாவின் இடது பக்க முகம் தோள்பட்டை இடதுகை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் மீது ஆசிட்டை வீசி சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

Similar News