பயங்கர விபத்து ! ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட 70 வாகனங்கள் - 5 பேர் பலி 35 பேர் படுகாயம் !!
பயங்கர விபத்து ! ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட 70 வாகனங்கள் - 5 பேர் பலி 35 பேர் படுகாயம் !!
கடும் பனிப் பொழிவு காரணமாக 70 -க்கும் அதிகமான வாகனங்கள் அமெரிக்காவின் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். 36-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடும் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள பல்வேறு முக்கியச் சாலைகளை மறைக்கும் அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால், சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றது.
இந்நிலையில் பாதை மாறிய 70-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கடும் விபத்துக்குள்ளானது. தற்போது வரை 5-க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். 36-க்கும் அதகமானோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.