சினிமா ஸ்டூடியோவில் பயங்கர தீ விபத்து..!

சினிமா ஸ்டூடியோவில் பயங்கர தீ விபத்து..!

Update: 2021-02-02 19:12 GMT

மும்பையில் அமைந்திருக்கும் கோரேகான் சினிமா மற்றும் சீரியல் ஸ்டூடியோவில் எதிர்பாராதவிதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எட்டுக்கும் மேற்பட்ட வாகனங்களில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கான ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மும்பை கோரேகான் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்டூடியோவில் இன்று காலை முதலே திரைப்படம் மற்றும் சீரியல்களுக்கான படப்பிடிப்பு  நடைபெற்று வந்தது.

இந்நிலையில் சற்றும் எதிர்பாராதவிதமாக மரக்கட்டை அடுக்கி வைக்கப்பட்ட ஸ்டூடியோவில் ஒரு பகுதியில் மின்கசிவு ஏற்பட்டது. இதனால் ஸ்டூடியோவின் தரைதளத்தில் மளமளவென தீ பரவ ஆரம்பித்தது. தொடர்ந்து மற்ற கட்டடங்களுக்கும் தீ பரவியது.

தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர்வ்8-க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அந்த ஸ்டூடியோவில் பல இடங்களில் பொருட்களை போட்டு குவித்து வைத்திருப்பதால், தீ பரவுவதை தடுப்பது கடினமாக உள்ளது.  இதனால் தீயை கட்டுக்குள் கொண்டு வருவது வீரர்களுக்கு சவாலாக உள்ளது. 

தீ விபத்து ஏற்பட்ட இடங்களை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளன. ஸ்டூடியோ அமைந்திருக்கும் பகுதி முழுவதும் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகையாக காட்சியளிக்கிறது. இதனால் குடியிருப்புவாசிகள் மத்தியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 


 

Tags:    

Similar News