சென்னை தேனாம்பேட்டை அருகே அடுத்தடுத்து  2 நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
  
சென்னை தேனாம்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஒரு காரை நோக்கி அடுத்தடுத்த 2 நாட்டு வெடிகுண்டுகள் வீசியுள்ளனர். எனினும் அந்த கார் வேகமாக சென்றது. இதனால் வெடிகுண்டு வீசப்பட்டதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் அந்த கார் கண்ணாடி சிறிது சேதம் அடைந்துள்ளது.

பட்டப்பகலில் அதுவும் பிரதான சாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

இது தனிப்பட்ட முறையில் அந்த காரில் இருந்த நபரை கொலை செய்வதற்காக வீசப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Tags: