பயங்கர நிலநடுக்கம்.. 26 பேர் பலி: பலர் படுகாயம்..!

பயங்கர நிலநடுக்கம்.. 26 பேர் பலி: பலர் படுகாயம்..!

Update: 2022-01-18 10:41 GMT

ஆப்கனில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் குறைந்தபட்சம் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு ஆப்கானிஸ்தானில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், மாலை 4 மணிக்கு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானது.

இந்த இரண்டு நிலநடுக்கங்களிலும் சிக்கி குறைந்தபட்சம் 26 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Similar News