டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு !!

டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு !!

Update: 2021-06-15 20:19 GMT

முதல்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. 9 அணிகள் பங்கேற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. இந்த இரு அணிகள் இடையிலான இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் வருகிற 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடக்கிறது.   

 இதற்காக விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அணி விவரம் :
ரோகித் ஷர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ராஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சாஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ். 


நியூசிலாந்து அணி நிர்வாகமும் இந்த போட்டியில் விளையாட உள்ள அணி வீரர்களை ஏற்கனவே அறிவித்துள்ளது. 

நியூசிலாந்து அணி வீரர்கள் பட்டியல்: 

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் பிளண்டல், டிரெண்ட் போல்ட், டேவன் கான்வே, கிராண்ட்ஹோம், மேட் ஹென்ரி, ஜேமிசன், டாம் லேதம், ஹென்ரி நிக்கோல்ஸ், அஜாஸ் படேல், டிம் சவுத்தி, ராஸ் டெய்லர், நீல் வாக்னர், வாட்லிங், வில் யங்.

newstm.in

Tags:    

Similar News