சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை முடிவுகள் செப்டம்பரில் கிடைக்கும்..!!

சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை முடிவுகள் செப்டம்பரில் கிடைக்கும்..!!

Update: 2021-07-24 21:45 GMT

இந்தியாவில் ஜனவரி 16-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுவருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுவருகின்றன. மே 1-ம் தேதி முதல் 18-வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தலாம் என்று ஒன்றிய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், சிறுவர்களுக்காக தயாரிக்கப்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியின் பரிசோதனை நடைபெற்று வருவதாக எய்ம்ஸ் இயக்குநர்ரன் தீப் குலேரியா தெரிவித்தார்.  

இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியதாவது,

“சிறுவர்களுக்காக தயாரிக்கப்பட்டு வரும் கோவாக்சின் தடுப்பூசி 3- வது கட்ட  மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனை முடிவுகள் செம்படம்பர் மாதம்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு முடிவுகள் வெளியானால் அந்த மருந்தை குழந்தைகளுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். செப்டம்பர் மாதத்திலிருந்து 2 முதல் 17 வயது வரை கொண்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு ஏற்படும்” என்றார்.

Tags:    

Similar News