3 நாளில் ரூ. 50 கோடி வசூலித்த தெலுங்கு பட ரீமேக்கில் நடிக்கும் விஜய் மகன்..!
3 நாளில் ரூ. 50 கோடி வசூலித்த தெலுங்கு பட ரீமேக்கில் நடிக்கும் விஜய் மகன்..!
தெலுங்கு சினிமாவில் வெளியான மூன்று நாட்களில் ரூ. 50 கோடி வசூலித்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்யை ஹீரோவாக நடிக்கவைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
கனடாவிலுள்ள நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், திரைப்படம் இயக்கம் தொடர்பான படிப்பை படித்து வருகிறார். விரைவில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தை அவர் இயக்குவார் என்கிற செய்திகளும் வெளிவந்தன. ஆனால் இது எதுவும் தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையில் தன்னுடைய மகனை ஹீரோவாக களமிறக்க நடிகர் விஜய் கதைகேட்டு வருகிறாராம். இதற்கிடையில் தெலுங்கில் வெளியான ’உப்பண்ணா’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையையும் விஜய் வாங்கி வைத்துள்ளாராம். இந்த படம் வெளியான 3 நாட்களில் ரூ. 50 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் மகன் சஞ்சய்யை நடிக்கவைக்க விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கில் வெளியான உப்பண்ணா படத்தில் புதுமுக நடிகர், நடிகையர் நடித்திருந்தனர். மேலும், படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
இப்படம் தெலுங்கில் அதிரிபுதிரி ஹிட்டாகியுள்ளது. விஜய் சேதுபதிக்கு அங்கும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். தற்போது இந்த படத்தின் திரைக்கதையை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.