எடப்பாடிக்கும், ஓபிஎஸ்ஸுக்கும் நன்றி! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ட்வீட்!

எடப்பாடிக்கும், ஓபிஎஸ்ஸுக்கும் நன்றி! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ட்வீட்!

Update: 2021-02-21 20:36 GMT

தமிழகத்தில் கலைத் துறை மற்றும் இலக்கியத் துறையில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருதுகளை அறிவித்து அதன்படி அவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையில் நடத்தப்பட்ட விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.இந்தப் பட்டியலில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், கௌதம் மேனன், டி இமான், கலைப்புலி எஸ் தானு உள்ளிட்ட பலர் கலைமாமணி விருது பெற்றனர். சிவகார்த்திகேயன் தனது விருதை அவரது அம்மாவுக்கு அர்ப்பணிப்பாக தெரிவித்துள்ளார்.


தமிழ் சினிமாவில் கதாநாயகிகளில் நடிகை ஐஸ்வர்யா ராஜேசுக்கு கலைமாமணி விருது அளிக்கப்பட்டது. இதை பெற்றுக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


ஐஸ்வர்யாஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் "கலைமாமணி என்ற கௌரவ விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பனீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, மாபா பாண்டியன் ஆகியோருக்கும் இயல் இசை நாடகக் குழுவிற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது திரைப் பயணத்தில் இன்னும் பல வெற்றிகளை அடைய இந்த விருது உத்வேகம் அளித்துள்ளது. சிறப்பான ஆதரவளித்த அனைவர்க்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News