அவ்வளவு தான்.. ஊரடங்கு முழுமையாக முடிந்தது ! பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி !!
அவ்வளவு தான்.. ஊரடங்கு முழுமையாக முடிந்தது ! பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி !!
தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. இந்நிலையில், நாளை முதல் ஊரடங்கு முற்றிலும் நீக்கப்படுவதாகவும், எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது என்றும் தெலுங்கானா அரசு அதிடியாக அறிவித்துள்ளது. இதனால் அம்மாநில மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மேலும், ஜூலை 1ஆம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களையும் திறக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக முழு அளவில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும், மாணவர்களை நேரடி வகுப்புகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.
மேலும், ஊரடங்கின்போது விதிக்கப்பட்ட அனைத்து வகையான கட்டுப்பாடுகளையும் முழு அளவில் அகற்றும்படி அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி தெலுங்கானாவில், கொரோனா பாதிப்பு விகிதம் 1.14 சதவீதமாக குறைந்திருந்தது. தினசரி பாதிப்பு 1400 ஆகவும், உயிரிழப்பு 12 ஆகவும் இருந்தது. எனினும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், கொரோனா மீண்டும் பரவும் என்பதால் கொரோனா தடுப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
newstm.in