தடுப்பூசிகளை அதிகரிக்காவிட்டால் 3ஆவது அலையை தடுக்க முடியாது.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள் !!
தடுப்பூசிகளை அதிகரிக்காவிட்டால் 3ஆவது அலையை தடுக்க முடியாது.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள் !!
இந்தியாவில் கட்டுப்பாடுகளை பின்பற்றுவதுடன், தடுப்பூசிகள் போடுவதை அதிகரிக்காவிட்டால் 3ஆவது அலை தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானி எச்சரித்துள்ளார்.
இந்தியா, கொரோனாவின் இரண்டாவது அலை யாரும் கணிக்கமுடியாத அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதில் நீண்டதொரு போராட்டத்தை நடத்துகிற நிலைக்கு அனைத்து தரப்பினரும் தள்ளப்பட்டுள்ளனர். இதில் இருந்து மீள்வதற்குள் கொரோனா 3ஆவது அலை குறித்த எச்சரிக்கை சமிக்ஞைகளும் வந்த வண்ணமாக உள்ளன.
அந்த வகையில் சூத்ரா மாதிரி விஞ்ஞானியான வித்யாசகர் கூறுகையில், நோய் எதிர்ப்பு பொருள் குறைகிறபோது, நோய் எதிர்ப்புச்சக்தியும் குறையும். இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகளைப்போடுவது அதிகரிக்காவிட்டாலும், கொரோனா கால கட்டுப்பாடுகளை ஒழுங்காக பின்பற்றாவிட்டாலும் இன்னும் 6 முதல் 8 மாதங்களில் 3ஆவது அலை தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும் சூத்ரா மாதிரி 3ஆவது அலையை கணிக்கவில்லை. அது தொடர்பாக செயல்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
இத்தாலியில் மிலானில் உள்ள சான் ரபேல் மருத்துவமனை நடத்திய ஆய்வில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் நோய் எதிர்ப்பு பொருள் குறைந்தது 8 மாதங்கள் வரை இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவின் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம் நடத்திய செரோ சர்வேயில், 5 அல்லது 6 மாதங்களில் நோய் எதிர்ப்பு பொருள் குறைந்துவிடுவதால், ஒருவர் மீண்டும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது என தெரிய வந்தது.
அதன் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன் கூறுகையில், வைரஸ் மேலும் உருமாறுகிறபோது 3ஆவது அலை தவிர்க்க முடியாது, அதற்கு தயாராக வேண்டும் என்று எச்சரித்தார். நாம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால், மாநிலங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தினால் 3ஆவது அலை எல்லா இடங்களிலும் அல்லது உண்மையில் எங்கும் வராமல் போகலாம்.
இது எந்தளவுக்கு மாநிலங்களில் உள்ளூர் அளவில், மாவட்ட அளவில், நகரங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன என்பதைப் பொறுத்துதான் 3ஆவது அலை அமையும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
newstm.in