உ.பி.,யில் தொடரும் கொடூரம்.. கணவருடன் சென்ற பெண்ணுக்கு நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் !
உ.பி.,யில் தொடரும் கொடூரம்.. கணவருடன் சென்ற பெண்ணுக்கு நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் !
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 19வயது இளம் பெண் மற்றும் அவரின் கணவர் என இருவரும் கடந்த 29ஆம் தேதி மாலை தங்கள் பைக்கில் உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். ஜார்நா நலா எனும் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தது.
பின்னர் திடீரென கணவரை தாக்கிய அக்கும்பல் இளம்பெண்ணை சாலையோரமாக இருந்த காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்றனர். அங்கு மனைவியை காப்பாற்ற சென்ற இளைஞரை கடுமையாக தாக்கிய கும்பல் அவரது கண் எதிரிலேயே மனைவியை மூவரும் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர் அதனை அவர்கள் வீடியோவாக எடுத்துக்கொண்டனர்.
இளம்ஜோடிகளிடம் இருந்து பணம், மற்றும் பொருட்களையும் பறித்துக்கொண்டு நடந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டிவிட்டு தப்பிச்சென்றனர் என அப்பெண் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மனஉளைச்சல் அடைந்த அவர்கள் இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட மூவரின் இருவரின் விவரங்களை அவர்கள் கூறினர். அதன்படி சம்பவத்தில் ஈடுபட்டது ஆக்ராவின் ஷாதரா பகுதியைச் சேர்ந்த கவுரி ராஜ்புத், மோனு ஆகிய இருவர் என தெரியவந்துள்ளது. மற்றொருவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இந்த கொடூரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் மூவர் மீதும் கடத்தல், கூட்டு பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலும் இருவரை தேடி வருவதாகவும் போலீசார் கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட இளம் பெண் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in