குழந்தை பிறந்ததும், காதலரை திருமணம் செய்த கல்லூரி மாணவி!!

காலையில் குழந்தை பிறந்தது.. மாலையில் காதலரை கரம் பிடித்த கல்லூரி மாணவி..

Update: 2020-02-04 16:42 GMT

திண்டிவனம் அருகே திருமணமாகாமலேயே கல்லூரி மாணவி குழந்தை பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அருகே உள்ள கடவம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கோகிலா (20) அதேப் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் (25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வந்த நிலையில், அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் கோகிலா கர்ப்பமானார். கர்ப்பமானதை வீட்டில் சொல்ல பயந்து போன கோகிலா கர்ப்பத்துடன் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கோகிலாவிற்கு வயிற்று வலி ஏற்பட்டதால் அவரது பெற்றோர் ஆவணிப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு கல்லூரி மாணவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் மருத்துவர்கள், குழந்தையின் தந்தை பெயரை கேட்டப் போது கோகிலா திருதிருவென விழித்துள்ளார். குழந்தை பிறந்ததை மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்த போது அதிர்ச்சியடைந்தனர். இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் தெரிவித்த தகவல் அடிப்படையில் திண்டிவனம் மகளிர் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது காதலர் பரமசிம் மூலம் தாயானது தெரிய வந்ததை அடுத்து பரமசிவத்தை அழைத்து வந்து விசாரித்தனர்.

அப்போது அவர், கோகிலாவை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். பின்னர் 2 பேரும் திண்டிவனம் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். போலீஸ் நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருவரும், மாலை மாற்றிக் கொண்டு குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். காலையில் பிரசவம் ஆனநிலையில், மாலையில் காதலரை கல்லூரி மாணவி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

newstm.in

Tags:    

Similar News