சபரிமலை கோவிலுக்கு செல்ல இருந்த தடை நீக்கம்..
சபரிமலை கோவிலுக்கு செல்ல இருந்த தடை நீக்கம்..
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி திறக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து, நூற்றுக்கணக்கான பக்தா்கள் புனித யாத்திரையைத் தொடங்கியுள்ளனா். கொரோனா பரவும் அபாயம் மற்றும் மழை காரணமாக கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் இணையவழி பதிவு வரிசையின் அடிப்படையிலேயே பக்தா்கள் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.
இந்தச் சூழலில், கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரு தினங்களாக பலத்த மழை பெய்தது மற்றும் அணைகளில் நீரின் அளவு வேகமாக உயா்ந்ததன் காரணமாக, சபரிமலைக்கு பக்தா்கள் செல்ல தடை விதித்து மாவட்ட நிர்வாகம் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடா்ந்து, பக்தா்கள் அனைவரும் மலை அடிவாரத்தில் நிலக்கல் பகுதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனா்.
இந்த நிலையில், மலைக்குச் செல்வதற்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் மழை குறைந்து இயல்புநிலை திரும்பியுள்ளது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியா் திவ்யா அறிவிப்பில், சபரிமலைக்கு பக்தா்கள் மீண்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார். அதே நேரம், பம்பா ஆறு மற்றும் அதற்கு தொடா்புடைய அணைகளின் நீரின் அளவு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு, அதனடிப்படையில் பக்தா்களை சபரிமலைக்குச் செல்ல தொடா்ந்து அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in