ரூ.500க்காக மூதாட்டியின் கழுத்தை அறுத்த சிறுவன்!! சிசிடிவியில் பதிவான கொடூரக் காட்சி!!
ரூ.500க்காக மூதாட்டியின் கழுத்தை அறுத்த சிறுவன்!! சிசிடிவியில் பதிவான கொடூரக் காட்சி!!
சேலம் அருகே திருமலைகிரி கொல்லத்தெருவை சேர்ந்த பெரியண்ணன் என்பவரின் மனைவி பழனியம்மாள்(75). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் பழனியம்மாள் வீட்டின் அருகே உள்ள மரத்தடியில் அமர்ந்துகொண்டு அப்பகுதியினருடன் பேசிக்கொண்டிருந்தார். அனைவரும் சென்ற நிலையில் மூதாட்டி மட்டும் தனியாக இருந்தார். அப்போது பைக்கில் வந்த 17 வயது சிறுவன் மூதாட்டியுடன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் தான் வைத்திருந்த கத்தியால் மூதாட்டியின் கழுத்தில் குத்தினார்.
மேலும் கழுத்தை அறுத்துவிட்டு அவரது சுருக்கு பையில் இருந்த ரூ.500 எடுத்துக்கொண்டு பைக்கில் தப்பிச்சென்றுவிட்டார். இதனை கண்ட பெண் ஒருவர் கூச்சலிடவே அப்பகுதியினர் வந்து பார்த்தப்போது, அதற்குள் அதிகளவு ரத்தம் வெளியேறி மூதாட்டி உயிரிழந்தார். இதுகுறித்து இரும்பாலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகர துணை கமிஷனர் தங்கதுரை மற்றும் போலீசார் விரைந்து சென்று, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
newstm.in