பப்ஜி மோகத்தால் கொடூரம்.. தாய், சகோதர, சகோதரிகளை சுட்டுக் கொன்ற சிறுவன் !!
பப்ஜி மோகத்தால் கொடூரம்.. தாய், சகோதர, சகோதரிகளை சுட்டுக் கொன்ற சிறுவன் !!
பப்ஜி விளையாட்டு மோகத்தில் குடும்பத்தினரை சிறுவன் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் தனது தாய் மற்றும் இரு சகோதரிகளுடன் வசித்து வருகிறான். சிறுவனின் தாயார் 45 வயதான சுகாதாரப் பணியாளர் நஹித் முபாரக். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டு மகன்கள், இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், லாகூரில் உள்ள கஹ்னா பகுதியில் கடந்த வாரம் நஹித் முபாரக், அவரது மகன் தைமூர் மற்றும் இரு மகள்களுடன் இறந்து சடலமாக கிடந்தனர். நான்கு பேரின் உடல்களை கண்ட உள்ளூர் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
நான்கு உடல்களையும் மீட்டு விசாரணையில் இறங்கினர். அப்போது 14 வயது சிறுவன் தான் தாய் நஹித் முபாரக் மற்றும் சகோதர, சகோதரிகளை சுட்டுக்கொன்றது தெரியவந்தது. மேலும் விசாரணையில், பப்ஜி விளையாடியதைத் தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன் என தெரிவித்தார்.
பின்னர் சிறுவனை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். அவர்களது வீட்டில் ஏற்கனவே துப்பாக்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதாவது, அவரது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி நஹித் வாங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பப்ஜி விளையாட்டு மோகத்தில் குடும்பத்தினரை சிறுவன் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in