மணமேடையில் பரிசை தூக்கி எறிந்த மணமகள்..! கோபத்தில் சிவந்த முகமாக மாறிய வீடியோ வைரல்!

மணமேடையில் பரிசை தூக்கி எறிந்த மணமகள்..! கோபத்தில் சிவந்த முகமாக மாறிய வீடியோ வைரல்!

Update: 2021-07-25 05:40 GMT

வட இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் எல்லாம் ஏதோ ஒரு வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்று அனைவரின் கவனத்தையும் அந்த திருமணம் ஈர்த்து விடுகிறது.

பேன்டி தாக்கூர் என்ற நபர் தனது முகநூலில் பகிரப்பட்ட வீடியோவில், மணமேடையில் மணமகன் அருகே மணமகள் உட்கார்ந்து கொண்டிருக்க திருமண நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அப்போது மணமகனின் நண்பர்கள் ஒரு பரிசை மணமகளிடம் கொடுக்கின்றனர்.

அவளும் அந்த பரிசை வாங்கி ஆர்வமுடன் திறந்து பார்த்த அடுத்த விநாடி அதனை தூக்கி எறிகிறார். மணமகளின் இந்த கோபத்திற்கு காரணம் அந்த பரிசு அட்டையில் குழந்தைக்கு பால் ஊட்டும் பாட்டில் இருந்தது தான்.

வெட்கத்தில் கன்னம் சிவக்க மணமேடையில் இருக்க வேண்டிய மணமகளின் அழகு முகம் கோபத்தில் சிவந்த முகமாக மாறிய வீடியோ வைரலாகி வருகிறது.

Full View

இந்த வீடியோ கடந்த ஜூன் 5-ம் தேதி ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து, 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், பேஸ்புக்கில் 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. 1.6 ஆயிரம் பேர் அதை சேர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News