பட்டப்பகலில் கல்லூரி வாசலிலேயே இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்! பகீர் சம்பவம்!

கல்லூரி பேராசிரியை ஒருவர், தான் பணிபுரியும் கல்லூரியின் வாசலிலேயே பெட்ரோல் ஊற்றப்பட்டு எரித்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்ராவில், வார்தா பகுதியில் இயங்கி வரும் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார் 25 வயது இளம்பெண் ஒருவர்.

Update: 2020-02-04 19:33 GMT

கல்லூரி பேராசிரியை ஒருவர், தான் பணிபுரியும் கல்லூரியின் வாசலிலேயே பெட்ரோல் ஊற்றப்பட்டு எரித்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்ராவில், வார்தா பகுதியில் இயங்கி வரும் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார் 25 வயது இளம்பெண் ஒருவர். 

தினந்தோறும் கல்லூரிக்கு பேருந்தில் செல்லும் பேராசிரியை, அதன் பின்னர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கொஞ்சம் தூரம் தள்ளி இருக்கும் கல்லூரிக்கு நடந்துச் செல்வது வழக்கம். அன்றும் அப்படித் தான் நடந்துச் சென்றார். கல்லூரி வாசலுக்குச் சென்றதும், திடீரென பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், பேராசிரியையை வழிமறித்து, தனது கையில் கொண்டுச் சென்றிருந்த பெட்ரோலை டீச்சர் மேல் ஊற்றிவிட்டு, தீக்குச்சியைப் பற்ற வைத்து, வீசி சென்று விட்டார்.

என்னை விட்டுடு... எனக்கு கல்யாணமாகிடுச்சு.. குழந்தையும் இருக்கு என்று கல்லூரி பேராசிரியை அலற அலற பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்து விட்டு, பைக்கில் தப்பிச் சென்று விட்டான் அந்த இளைஞன். உடம்பெல்லாம் தீப்பற்றி எரிய.. அலறித் துடித்த பேராசிரியையின் சத்தம் கேட்டு, அந்த வழியாக சென்ற பேருந்தில் இருந்த பயணிகள் ஓடி வந்து, பேராசிரியை மீது தண்ணீரையும், மணலையும் அள்ளி இறைத்து தீயை அணைத்தனர்.

கடுமையான தீக்காயங்களுடன் இருந்த பேராசிரியையை ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், இது குறித்த போலீசாரின் விசாரணையில், கல்லூரி பேராசிரியைக்கு திருமணமாகி, 7 மாத கைக்குழந்தையும் இருக்கிறது என்றும், அது தெரிந்தும், விக்கி நாக்ரலே எனும் இளைஞர் ஒருதலையாக டீச்சரை காதலித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

தனக்கு திருமணமாகி, குழந்தையும் இருக்கிறது என்று பலமுறை சொல்லியும், பரவாயில்லை...  தன்னைக் காதலித்து கல்யாணம் செய்து கொள்ளும் படி அந்த இளைஞர் கட்டாயப்படுத்தி உள்ளார். பேராசிரியை தொடர்ந்து மறுத்து வரவே, ஆத்திரத்தில், எனக்கு கிடைக்காத  உன் அழகு, உன்னுடைய கணவனுக்கும் கிடைக்கக் கூடாது எனக் கூறியபடியே பேராசிரியை மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியது தெரிய வந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் இதனை தெரிவித்த போலீசார், இளைஞரைக் கைது செய்தனர்.

newstm.in

Tags:    

Similar News