மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை!! நீதிமன்றம் அளித்த அதிரடி தண்டனை!!

மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை!! நீதிமன்றம் அளித்த அதிரடி தண்டனை!!;

Update: 2020-03-10 15:53 GMT

நாகையை சேர்ந்தவர் செல்வகுமார் (40). திருமணத்திற்கு பிறகு குடும்பத்துடன் காரைக்காலில் வசித்து வந்தார். இவர் மதுப்போதையில் செல்போனில் ஆபாச படங்களை பார்த்து அதேபோன்று மனைவியை உடலுறவுக்கு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2019 அக்டோபர் 9ஆம் தேதி மனைவி வெளியில் சென்று இருந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த 9 வயது மகளை போதையில் செல்வகுமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனை சிறுமி தனது தாயாரிடம் கூறினார். பின்னர் இதனை வெளியில் சொன்னால் தாய், மகளை கொலை செய்வதாக செல்வக்குமார் மிரட்டல் விடுத்தார். எனினும் உறவினர்கள் உதவியுடன் அளித்த புகாரின்படி கோட்டுச்சேரி போலீசார் செல்வக்குமாரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு காரைக்கால் மாவட்ட நீதிபதி விசாரித்து வந்தார். செல்வகுமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 25 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

newstm.in

Tags:    

Similar News