நாடு முழுவதும் தசரா பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. அதன்படி, சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்டத்தின் பாடல்கான் பகுதியில் தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் ஊர்வலமாக சென்றுள்ளனர்.

அப்போது, திடீரென சிவப்பு நிற கார் ஒன்று அதிவேகத்தில் ஊர்வலமாக சென்றுக்கொண்டிருந்த மக்கள் மீது மோதி தூக்கி வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

கார் மோதியதில் ஒரு உயிரிழந்ததாகவும், சுமார் 20 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கார் மற்றும் வாகனத்தை ஓட்டி வந்த நபர் குறித்து தற்போது வரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

சம்பவத்தை தொடர்ந்து சாலை ஓரத்தில் விபத்துக்குள்ளான காருக்குளிருந்து போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

Tags: