விவசாயிகள் மீது காரை ஏற்றிய வழக்கு.. கேள்வி கேட்ட பத்திரிகையாளரை அவதூறாக திட்டிய மத்திய அமைச்சர்– வீடியோ

விவசாயிகள் மீது காரை ஏற்றிய வழக்கு.. கேள்வி கேட்ட பத்திரிகையாளரை அவதூறாக திட்டிய மத்திய அமைச்சர்– வீடியோ

Update: 2021-12-16 08:05 GMT

சிறையில் உள்ள மகன் ஆஷிஷ் மிஸ்ரா பற்றி கேள்வி கேட்ட நிருபரை மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தரக்குறைவாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது இரக்கமற்ற முறையில் கார் ஏற்றியுள்ளார் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா. இதில் விவசாயிகள் பலரும் உயிரிழந்தனர். இந்த இரக்கமற்ற செயலுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் நீதிமன்ற கடும் உத்தரவின்பேரில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகனை மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா நேற்று பார்த்துவிட்டு வெளியே வந்தார். அவரிடம் இது தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அப்போது உரிய பதில் அளிக்காமல், பத்திரிகையாளரிடம் இருந்து மைக்கை பிடுங்கிய அஜய் மிஸ்ரா அவரை தரக்குறைவாக பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மைக்கை நிறுத்து, இந்தமாதிரி முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்காதீர்கள் என்று கேள்வியெழுப்பியதுடன், செய்தியாளர்களை திருடர்கள் என்று அழைப்பதும் பதிவாகியுள்ளது.

முன்னதாக, அக்டோபர் 3ஆம் தேதி லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கொல்லப்பட்டது "திட்டமிட்ட சதி" என்று சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில், கொலை செய்யும் நோக்கத்துடன் ஆஷிஷ் மிஸ்ரா ஓட்டிச் சென்ற வாகனத்தால் விவசாயிகள் நசுக்கப்பட்டதாகவும், அது அலட்சியத்தால் ஏற்பட்ட மரணம் அல்ல என்றும் கூறியுள்ளது.

மேலும், ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் பிறருக்கு எதிராக வேகமாக வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டை மாற்றிவிட்டு கொலை முயற்சி மற்றும் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டை சேர்க்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. இதன்பின்னர் மத்திய அமைச்சரவையில் இருந்து அஜய் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இக்கோரிக்கையை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்தனர். 



newstm.in

Tags:    

Similar News